குடும்பத்தில் அவ்வளவு கஷ்டம் இருந்தது - சிறு வயதில் தான் சந்தித்த வறுமையை பகிர்ந்துக் கொண்ட ராஷ்மிகா!

 
1

கன்னடப் படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘சரிலேரு நீகேவரு’, ‘பீஷ்மா’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.குறுகிய காலத்திலேயே மகேஷ் பாபு, நாகர்ஜுனா, நானி உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துவிட்டார்.பின்னர் கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் தனது குழந்தை பருவத்தில் வறுமையை அனுபவித்ததாகவும், ஒரு பொம்மை வாங்க கூட காசு இல்லை என்றும் பகிர்ந்து கொண்டார்.

1

இது குறித்து நேர்க்காணல் ஒன்றில் பேசிய ராஷ்மிகா, ”நான் இளமையாக இருந்தபோது, ​​என் பெற்றோரிடம் பணம் இல்லை. குடும்பத்தில் அவ்வளவு கஷ்டம் இருந்தது. வாடகை செலுத்த முடியாததால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நாங்கள் ஏழ்மையில் இருந்தபோதும் என் பெற்றோர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர். வாங்க முடியாத பொம்மைகளுக்காக நான் ஏங்கினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னவயதில் நடந்த ஜாலியான அனுபவங்களை பற்றி கூறும் போது “ஒரு முறை நானும் எனது தோழிகளும் டியூஷன் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஒரு மாமரம். அதில்  மாங்காய்கள் இருந்ததைப் பார்த்ததும் பறித்து சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.”மரத்தில் ஏறி மாங்காயை பறித்துவிட்டு கீழே இறங்குவதற்குள் சத்தம் கேட்டு வீட்டுக்காரப் பெண், கையில் கம்புடன் வெளியே வந்துவிட்டார். நான் வேகமாக மரத்திலிருந்து கீழே குதித்து ஓடினேன் .  அவரும் துரத்தி வந்து எங்களைப் பிடித்து திட்டினார். இது அந்த காலத்தில் எங்களுக்கு ஜாலியாக இருந்தது “என்று தெரிவித்துள்ளார்.

From Around the web