ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இயக்கும் சூரரை போற்று இயக்குனர் ?
Nov 24, 2022, 10:05 IST

இறுதிச் சுற்று, சூரரைப் போற்று படங்களை அடுத்து சுதா கொங்கரா அடுத்த எந்த நடிகரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.
தற்போது அவர் கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்போலே நிறுவனத்துடன் புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக யார் நடிக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க சுதா கொங்கரா முயற்சி செய்து வருகிறார்.இந்த படத்தை சூர்யாவின் 2d நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் ஆகிய இருவரரில் ஒருவர் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.