ரட்சகன் பட நாயகிக்கு விரைவில் திருமணம்..!! மாப்பிள்ளை இவரா ? 

 
1

நடிகையும் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ்மான சுஷ்மிதா சென்னை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் துணை தலைவராக இருந்த லலித் மோடி, ஐபிஎல் போட்டிகளில் 460 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் சம்மேளனத்தில் இருந்து நீக்கப்பட்ட இவர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்ய இருந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித் மோடி தற்போது இங்கிலாந்தில் சொகுசாக வாழ்ந்து வருகிறார்.

56 வயதாகும் லலித் மோடி, தன்னுடைய பெட்டர்ஹாப் எனக் கூறி முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

SushmitaSen

இது தொடர்பாக லலித் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாலத்தீவு உள்ளிட்ட உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியிருப்பதாக கூறியுள்ளார். என்னுடைய மனைவி சுஷ்மிதா சென்னுடன் சென்றிருந்தேன் எனத் தெரிவித்துள்ள அவர், புதிய வாழ்க்கை புதிய பயணம் என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.


அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு டிவீட்டில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் அதுவும் நடக்கும் என கூறியிருக்கிறார்.


இருவரும் லண்டனில் வசித்து வருகின்றனர். லலித் மோடி, மினால் என்பவரை 1991-ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் இடையிலான திருமண வாழ்க்கை 2018-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன்பின்னர், லலித்மோடி தனியாக வசித்து வந்தார். இதேபோல் முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், ரோஹ்மன் ஷால் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது லலித் மோடியுடன் டேட்டிங் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

மிஸ் யுனிவர்ஸ் ஆக கடந்த 1994-ல் மகுடம் சூடிய சுஷ்மிதா சென், 1996-ல் தஸ்தக் என்ற இந்தி படத்தில் அறிமுகமானார். பிவி நம்பர் ஒன், மைனே பியார் கியூன் கியா, மைன் ஹூன் நா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சுஷ்மிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள். இறுதியாக ஆர்யா 2  என்ற வெப் சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web