பாடலாசிரியர் கபிலன் வரிகளில் வெளியான 'ராட்சஸ மாமனே' பாடல்..!!

 
1

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, மற்றும் பல பிரபலங்கள் நடிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரியுடன் தொடங்கிய இவ்விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் படத்தில் நடித்த திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 "பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 'ராட்சஸ மாமனே' பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் கபிலன் வரிகளில் ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் வினாயக் ராம் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

From Around the web