நண்பா ரெடியா..!!  ‘வாரிசு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் டிராக் ப்ரோமோ இன்று மாலை வெளியாகிறது..!!  

 
1

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தோழா, மஹரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

Varisu

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா, ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில காரணங்களால் இந்த பாடல் வெளியாகவில்லை.


இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

From Around the web