மீண்டும் ஒரு டைம் ட்ராவல் படம் பார்க்க ரெடியா..? சினம் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!!  

 
1

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நடிகர் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கணம். இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் தமிழில் கணம் – தெலுங்கில் ஓக்கே ஒக்க ஜீவிதம் என தயாராகியுள்ள இத்திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

டைம் ட்ராவல் பாணியில் கடந்த காலத்துக்குச் சென்று தன் தாயை காண விரும்புகிறார் நாயகன். விஞ்ஞானியாக வரும் நாசர் நாயகனுக்கு உதவுகிறார். காலம் கடக்கும் நாயகனின் ஆசை நிறைவேறியதா? இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. 3 நண்பர்களை சுற்றியே கதை நிகழ்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை அமலா படத்தில் தாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். 9-ம் தேதி வெளியாகும் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


 

From Around the web