ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு விரைவில் புதிய தலைவர் ?
Thu, 29 Dec 2022

நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்த உதயநிதி, பிசியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் 'கலகத்தலைவன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடித்து வந்தார்.
இதற்கிடையே சேப்பாக் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி சமீபத்தில் அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். இதனால் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல் வாதியாக மாறியுள்ளார். அதேநேரம் அவர் நிர்வகித்து வந்த ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து விலகினார்.
இந்நிலையில் உதயநிதி வகித்து வந்த பொறுப்பை அவரது மனைவி கிருத்திகா உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் ‘கிருத்திகா உதயநிதி வழங்கும்’ என்று இடம்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.