இன்று காலை 11 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரெட் ஜெயண்ட்..!!

 
1

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி, தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக பெரிய படங்களின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கி வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட விக்ரம், திருச்சிற்றம்பலம், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதனால் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் அடுத்து என்ன திரைப்படத்தை வெளியிடும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார். 

இந்நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியன் 2, தளபதி 67, விடுதலை என அடுத்தடுத்து சில படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதில் ஏதேனும் ஒரு படத்தின் அறிவிப்புதான் நாளை வெளியாகவுள்ளது. அதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.  

1

From Around the web