`ஐங்கரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
Sun, 8 May 2022

ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார் நடித்திருக்கும் படம் `ஐங்கரன்'. நாயகனாக நடித்ததுடன் படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் ஜி.வி பிரகாஷ். சரவணன் அபிமன்யு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெளியிடத் தயாராக இருந்தாலும், சில காரணங்களால் இந்தப் படம் ரிலீஸ் ஆகாமலே இருந்தது.
சமீபத்தில் இந்தப் படம் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகாமல் போனது. இந்நிலையில், படத்தை மே 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.
#ayngaran releases in theatres on MAY 12th . Hearing a lot of positive reviews . Best of luck @gvprakash god bless. pic.twitter.com/1RTfmYp07e
— Dhanush (@dhanushkraja) May 7, 2022