சாய் பல்லவி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.!!
May 9, 2022, 21:54 IST

சாய்பல்லவி நடிப்பில் "விராட பர்வம்" நீண்ட இடைவேளைக்கு பிறகு ரிலீசாக தயாராகி உள்ளது. ராணா டகுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விராட பர்வம் வருகிற ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து, அதனுடன் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சோல் அஃப் வெண்ணிலா’ என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.