நெகிழ்ச்சி..!! தனுஷ் பிறந்த நாளுக்கு விஜய் ரசிகர்கள் அன்னதானம்..!!  

 
1

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஒரு பக்கம் ஹாலிவுட்டில் அறிமுகம், தனது முதல் படமான தி கிரே மேன் படத்திற்கு வரவேற்பு, அடுத்தடுத்து முக்கிய படங்களில் ஒப்பந்தம், அண்ணனுடன் நானே வருவேன் படம் என தனுஷின் திரையுலக வாழ்க்கை உற்சாகத்துடன் காணப்படுகிறது.இந்நிலையில் நேற்று அவர் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையொட்டி நேற்று முன்தினத்திலிருந்து, ரசிகர்கள் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். தனுஷின்  பிறந்தநாளில் அவரது ரசிகர்களும் பல நலத்திட்ட உதவிகள் செய்தனர். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தனுஷின் பிறந்த நாளுக்கு அன்னதானம் வழங்கி உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

"தளபதி அவர்களின் விலையில்லா விருந்தகத்தின் 192 ஆம் நாள் கோவையில் நேற்று நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை வடக்கு நகர தனுஷ் இளைஞரணி நற்பணி மன்றம் தலைமை சார்பாக தளபதி விலையில்லா விருந்தகத்தில் இட்லி, எலுமிச்சை சாதம், சாம்பார் மற்றும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதில் தளபதி மக்கள் இயக்கம் நிர்வாகிகளும் மற்றும் திரு.தனுஷ் மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


 

From Around the web