அனல் பறக்கும் ஒர்கவுட் வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங்..!!
Fri, 10 Jun 2022

சுதா கொங்கரா.இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.
இதையடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார்.அதிலும் குறிப்பாக கடந்த 2020ஆம் ஆண்டு அசோக் செல்வனுடன் இவர் இணைந்து நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரித்திகா சிங்கிற்கு மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது .
சினிமாவில் நடிக்க வருவதிக்ரு முன் நடிகை ரித்திகா சிங் ஒரு ரியல் பாக்ஸர் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில், தற்போது நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்சிங் ஒர்கவுட்டில் ஈடுபட்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.