கோவா முதல்வரை சந்தித்தார் ராக்கி பாய்..!! 

 
1

கன்னட நடிகர் யாஷ் தற்போது ‘ராக்கி பாய்’ என்றே செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. சமீபத்தில் கேஜிஎப் படத்தின் 2ம்பாகம் வெளியாகி திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தி திரைப்படமான தங்கல் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூல்  செய்திருந்தன. அவற்றின் சாதனையை முறியடிக்கும் வகையில் கேஜிஎப்2ம் பாகம் 2 ஆயிரம் கோடி ரூபாயை கடந்து வசூல் மழை பொழிந்து வருகிறது. இதன் மூலம் இந்திய திரையுலகில் பெரும் வரலாற்று சாதனையை கேஜிஎப் திரைப்படம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் நடிகர் யாஷ், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்தை நடிகர் யாஷ், தனது மனைவியுடன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.
யாஷ்

நடிகர் யாஷ் தனது குடும்பத்துடன் கோவாவுக்கு சுற்றுலா வந்திருப்பதை அறிந்த முதல்வர் பிரமோத் சாவந்த், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்ததன் பேரில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் நடிகர் யாஷ் தனது அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பை கோவாவில் மேற்கொள்ள அப்போது கோரிக்கை வைத்ததாகவும் முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

From Around the web