ரூல் நெம்பர் 01 : டோன்ட் ஆக்ட் லைக் ஹீரோ.. வெளியான துணிவு படத்தின் டிரெய்லர்..!!
‘வலிமை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்துள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பட அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் படி பத்திரிகையாளர் மைபா நாராயணன் கதாப்பாத்திரத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். நடிகர் பிரேம், பிரேம் என்ற தனது சொந்தப் பெயரிலேயே நடித்திருக்கிறார்.
மேலும் நடிகர் பக்ஸ், ராஜேஸ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென், கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜிஎம் சுந்தர் முத்தழகன் என்ற வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமசந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர்.
பிரபல நடிகர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை மஞ்சுவாரியர் கண்மணியாக நடித்திருக்கிறார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில், ‘துணிவு’ படத்தின் டிரெய்லரை ஜி ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.