மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

 
1

‘வாலி’ படத்தின் மூலம் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ‘குஷி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் முன்னனி இயக்குநராக உருவானார். ‘நியூ', ‘அன்பே ஆருயிரே’ போன்ற படங்களை இயக்கி நடித்தார். ‘கள்வனின் காதலி', ‘வியாபாரி', ‘நண்பன்’, ‘இறைவி’, ‘மெர்சல்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘ஸ்பைடர்’ படத்தில் கொடூர வில்லனாகவும், ‘மாநாடு’ படத்தில் புத்திசாலி வில்லனாகவும் நடித்து மிரட்டினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அதன் பின்னர் அவர் படங்களை இயக்கவில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், 7 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார். கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகி மற்றும் இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற இருக்கிறது. இந்தக் கதை ஒரு காரை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. இதற்காக ஜெர்மனியில் ஒரு புதிய காருக்கு ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு, இந்த புதிய படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் அவர் படத்தை இயக்க உள்ளதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

From Around the web