ஓடிடியிலும் வெளியாகும் சாய் பல்லவியின் ‘கார்கி’..!!

 
1

அறிமுக இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவான படம்  ‘கார்கி’.இப்படம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசியது. சென்னையில் அபார்ட்மெண்ட் ஒன்றில் சிறுமிக்கு நடந்த பாலியியல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவானது. 

இந்த படத்தில் காளி வெங்கட், காலேஷ் ராமானந்த்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் காளி வெங்கட், வழக்கறிஞராக நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகி வெளியானது. 

1

 ஜூலை 15-ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆர்பாட்டம் இல்லாத வெளியான இப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12-ஆம் சோனி லைவ் ஓடிடித்தளத்தில் வெளியாக உள்ளது. 
 

From Around the web