மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் !

 
1

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. கடைசியாக தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கதீஜா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். அதேபோன்று ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. 

தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, சகுந்தலம் மற்றும் யாசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நடிகை சமந்தா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா ஒரு விதமான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், விரைவில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

From Around the web