மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா... ஏன் தெரியுமா ?

 
1

புராண கதையாக சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியிள்ள படம் தான் ‘சாகுந்தலம்’. குணசேகரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா சாகுந்தலையாக நடித்துள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அல்லு அர்ஹா, தேவ் மோகன், சச்சின் கடேகர், கபீர் பேடி, மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதி பாலன், அனன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குணசேகரன் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ் தெலுங்கில் வெளியான ‘ருத்ரமா தேவி’ மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு அர்ஜீன், சைனிகுடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது. இந்தபடத்திற்கு மணிசர்மா இசையமைத்து வருகிறார்.

Samantha

இப்படத்தை வருகிற பிப்ரவரி 17-ம் தேதி தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் 3டி-யில் ரிலீஸ் செய்ய பிளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் குணசேகரன் பேசும்போது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தாதான் என்று பாராட்டினார். அவரது பேச்சைக்கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும், இயக்குநர் குணசேகரன் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், ஆனால் தயாரிப்பாளர் நீலிமா சமந்தாதான் நடிக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்தார்.


 பின்னர் சமந்தா பேசும்போது, எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை என்று கூறினார்.

From Around the web