ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சமந்தா.. ஷாக்கான ரசிகர்கள்

 
1

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். விஜய், சூர்யா உள்ளிட்ட கோலிவுட் நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதேபோல தெலுங்கிலும் பல சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை குலுங்க வைத்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டும் சமந்தா நடித்து வருகிறார். ‘யசோதா’ என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் சமந்தா நடிப்பில் சகுந்தலம் மற்றும் குஷி போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

Samantha-returning-the-wedding-saree

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக மையோசிடிஸ் என்ற அரிதான தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

சமீபத்தில் யசோதா படம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து மனம் திறந்தார். அதில், “நல்ல நாட்களும் மோசமான நாட்களும் என் வாழ்க்கையில் மாறி மாறி வருகின்றன. சில நாட்களில் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது கூட சிரமமானதாக இருக்கும். சில நாட்கள் எனக்கு இருக்கும் பிரச்னைகளை எதிர்த்து நான் போராட விரும்புவேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

samantha

இதனிடையே நடிகை சமந்தா நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்துவரும் சமந்தா அந்தப் படத்தின் பணிகளை முடித்தபிறகு இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளாராம்.

மையோசிடிஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த சமந்தா, அடுத்ததாக தென் கொரியா செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தற்போது ஒப்பந்தமான பாலிவுட் படங்களிலிருந்தும் விலகவுள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From Around the web