வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த சமந்தா.!

 
1

விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தன் விடா முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

திருமணத்துக்கு பிறகும் அரைகுறை உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டு கணவர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய குத்தாட்டத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன. பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துவரும் சமந்தா தற்போது கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.சமந்தா சமூகத்தளங்களிலும் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். 

இந்நிலையில் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில், வெறும் டவல் மட்டும் அணிந்து ஒரு கண்ணாடி முன் செல்ஃபியை பகிர்ந்துள்ளார். இது, அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

அவரது மேக்கப் டிசைனர் நீரஜா கோனா என்பவரது இன்ஸ்டகிராம் ஸ்டோரில், “பாப்பா உன்னை நேசிக்கிறார், நீங்கள் ஆச்சரியமாக இருக்கிறீர்கள் என்ற குறிப்பிடப்பட்ட புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டகிராமில், அடடா, நான் ஏற்கனவே உங்களை மிஸ் செய்கிறேன்.. திரும்பி வாருங்கள், அழகான குறிப்புக்கு நன்றி என்று ரீபிலே செய்துள்ளார்.

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் படத்திற்காக படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஷிவா நிர்வாணா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. சமந்தாவின் பிறந்தநாளையும் காஷ்மீரில் படக்குழுவுடன் கொண்டாடியது குறிப்படத்தக்கது.

இதற்கிடையில், சமந்தா தனது வரவிருக்கும் படமான சாகுந்தலம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். குணசேகர் இயக்கியுள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக, இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற தமிழ்-தெலுங்கு இருமொழித் திரைப்படம் கையில் உள்ளது.

From Around the web