இன்ஸ்டா பதிவால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

 
1

பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் சமந்தா. இவர் நடிப்பில் யசோதா, சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது சமீபத்தில் யசோதா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி புது வித கதை என்பதை உணர்த்துகிறது.

அதிரடி சண்டையுடன் திகில் கதையம்சத்தில் தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் திடீரென நடிகை சமந்தா அவரின் சமூக வலைதள பக்கங்களில் தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து பதிவிட்டு இருக்கிறார்.இன்று தனது ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். இன்ஸ்டாகிராமில், சமந்தா தனது மணிக்கட்டில் டிரிப்சுடன் படுக்கையில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.ஒரு மைக் அவருக்கு முன்னால் உள்ளது. நடிகை முதுகை காட்டியபடி இருந்தார். தன் முகத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், கைகளால் இதய அசிம்பலை அடையாளபடுத்தினார். கையில் டிரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

1

அவர் தனது டுவிட்டில்

யசோதா டிரெய்லருக்கான உங்கள் கருத்து அமோகமாக இருந்தது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்பும் தொடர்பும் தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை அளிக்கிறது..

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறையும் (மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன்) நோய் இருப்பது கண்டறியப்பட்டது.அது நிவாரணம் அடைந்த பிறகு இதைப் பகிரலாம் என்று எதிர்பார்த்தேன்.ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சற்று அதிக நாள் எடுத்துக்கொள்கிறது.

நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.நான் குணமடையும் நாளை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்... இதுவும் கடந்து போகும்." என கூறி உள்ளார்.

 


 


 

From Around the web