நாளை ஒடிடியில் வெளியாகிறது சமந்தாவின் பிளாக்பஸ்டர் திரைப்படம்..!!  

 
1

கடந்த மாதம் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான படம் யசோதா. ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை  ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கியுள்ளார்.

 இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா, எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. 

yashoda

இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை டிசம்பர் 9-ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் இணையத்தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 

From Around the web