விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதியில் சாமி தரிசனம்..!!

 
1

லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா நீண்ட நாட்களாக வெற்றிகரமான கதாநாயகியாக தமிழ் திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெளியாகி உள்ள நிலையில், கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ படத்திற்காக விஜய் டிவியில் பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை நயன்தாரா கொடுத்திருந்தார். அப்போது, உங்களுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போ திருமணம் என டிடி கேட்க, இருவருக்கும் நிச்சயம் ஆகிடுச்சு என்கிற ரகசியத்தை போட்டு உடைத்து பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் நயன்தாரா. போயஸ் கார்டனில் கட்டி வரும் வீட்டுக்கு குடிபோன உடனே திருமணம் நடக்கும் என பேச்சுவார்த்தைகள் கிளம்பின.

இந்நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதியில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்ததுமே நெட்டிசன்கள் திருப்பதியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் செய்து கொண்டதாக வதந்திகளை கிளப்பி வருகின்றனர். ஆனால், இருவரும் சாமி தரிசனம் செய்ய மட்டுமே சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

From Around the web