பிறந்தநாளில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை..!! 

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர்  தன்னுடைய 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இதையொட்டி திருப்பதியில் தனது அம்மா உடன் சென்று சாமி தரிசனம் செய்தார் த்ரிஷா. தரிசனம் முடிந்து வெளியே வந்த த்ரிஷா உடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

1

இதனிடையே த்ரிஷா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛20 ஆண்டுகள். உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் நன்றியுடனும் உணருகிறேன். இன்னும் நல்ல படைப்புகள், இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

வெற்றியோ, தோல்வியோ எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு பெரிய நன்றி. அவர்கள் தரும் ஊக்கமும், ஆதரவும் தான் என்னை இன்னும் நல்ல படங்களில் நடிக்க உந்துதலாக இருக்கிறது'' என்றார்.

From Around the web