பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியீடு..!! 

 
1

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, பலரின் காலர் ட்யூனாக மாறியது. இதற்கடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ’சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது. கடந்த வாரம் அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் செப்டம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையராக நடிக்கும் சரத்குமார் மற்றும் பார்த்திபனின் தோற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


 

From Around the web