விரைவில் சர்தார் படம் ஒடிடியில்... எப்போ தெரியுமா ? 

 
1

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘சர்தார்’. கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரித்துள்ளனர்.இந்த படத்தில்  கார்த்தியுடன்  ராஷி கண்ணா மற்றும் ரெஜிஷா விஜயன் என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.இதுதவிர நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக சங்கி பாண்டே நடித்துள்ளார்.

1

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவான இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.  நடிகர் கார்த்தி 6 வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ள இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி ஆஹா ஓடிடித்தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

From Around the web