பத்த வெச்சி பறக்க விட போறேன் - மாஸாக வெளியான சர்தார் பட ட்ரைலர்..!!
Oct 15, 2022, 09:05 IST
நடிகர் கார்த்தி கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.
கார்த்தி இரண்டு வித்தியாசமான ரோல்களில் கலக்கி இருப்பதாக சொல்லப்படும் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்துள்ளார்.
உளவாளி மற்றும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதோடு வயதான கேரக்டரில் வரும் கார்த்தியின் நடிப்பு மற்றும் ஆக்சன் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சர்தார அவ்ளோ ஈஸியா எல்லாம் பிடிச்சிட முடியாது என்ற வசனத்துடன் தொடங்கும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 - cini express.jpg)