சத்யப்பிரியாவை கொன்ற சதிஷை ரயில்முன் தள்ளி விட்டு தண்டிக்க வேண்டும்.. விஜய் ஆண்டனி ஆவேசம்..!! 

 
1

சென்னை அருகே உள்ள ஆதம்பாக்கம் ராஜா தெருவில் உள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (47). இவரது மனைவி வரலட்சுமி (43). இவா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இந்த தம்பதியின் மகள் சத்யப்பிரியா (20). இவா் தி.நகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சதீஷ் (23). சத்யப்பிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். சதீஷ், சத்யப்பிரியாவிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியும் தொந்தரவும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

mount

ஆனால் சத்யப்பிரியா அதை ஏற்றுக் கொள்ளவில்லையாம். அண்மையில் சதீஷ், சத்யப்பிரியாவை தாக்கவும் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சத்யப்பிரியா, நேற்று வழக்கம்போல கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தாா். அப்போது அங்கு நின்றுக் கொண்டிருந்த சதீஷ், சத்யப்பிரியாவை வழிமறித்து தகராறு செய்துள்ளாா்.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் திடீரென சத்யப்பிரியாவை தள்ளிவிட்டாா். இதில் ரயிலில் சிக்கி சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

உடனே அவா்கள், சதீஷை பிடிக்க முயற்சித்தனா். ஆனால் அதற்குள் சதீஷ் அங்கிருந்து தப்பியோடினாா். இது குறித்து தகவல் அறிந்து ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சத்யப்பிரியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விவகாரம் பெரும் மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில், சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதிஷை, பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல், தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி, சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக, கனம் நீதிபதி அவர்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்


 

From Around the web