வைரலாகும் விஜய்யின் நேருக்கு நேர் செகண்ட் ப்ரோமோ..!!

 
1

10 வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொள்கிறார்.அதற்கான எதிர்பார்ப்பு அவரது வரவிருக்கும் ‘பீஸ்ட் ‘ போலவே எகிறியுள்ளது. 

இந்நிலையில் , சமீபத்திய ப்ரோமோவில் நெல்சன், விஜயை பார்த்து வீட்டில் நான்கு கார்கள் இருக்கும்போது வாக்களிக்க ஏன் சைக்கிளில் பயணம் செய்தீர்கள் என்று விஜயிடம் கேட்கிறார். 2021 தமிழ்நாடு பொதுத் தேர்தல்களின் போது டாப் ஹீரோ சைக்கிள் ஓட்டி வாக்குச் சாவடிக்குச் சென்றது தொடர்பானது இது.

பீஸ்ட் படம் ஏப்ரல் 13ஆம் தேதி படம் வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி வெளியாகிறது  


 

From Around the web