எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!! ரூபாய் நோட்டில் ‘அஜித்’..!! 

 
1

‘வலிமை’ படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்துள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்தடுத்து பட அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.

Thunivu

இந்த நிலையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர்3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று ட்ரெண்டிங்காகியுள்ளது. ஆரம்பத்தில் 'துணிவு' படம் ஜனவரி 12-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது படம் ஜனவரி 11-ம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் திரையரங்கு ஒன்றில் நடிகர் அஜித் படத்திற்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோன்று ‘துணிவு’ படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வெளியிடப்படுகிறது,  நடிகர் அஜித்தின் ரசிகர்கள் துணிவு படத்தை காண ரசிகர்கள் பல்வேறு விதமாக நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.  


பொள்ளாச்சியில் வால்பாறை சாலையில் உள்ள தங்கம் தியேட்டரில் ‘துணிவு’ படம் வெளியாகவுள்ளது.  இதை கொண்டாடும் விதமாக அஜித் ரசிகர்கள் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல் டிக்கெட் அடித்து முதல் நாள் காட்சிக்கு ரசிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்,  டிக்கெட்டுகளை வாங்கிய ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் உள்ளதாக தெரிவித்தனர்.

From Around the web