பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி வாழ்க்கையில் நடந்த சோகத்தை பாருங்க..!!  

 
11

உடலால் ஊனமுற்றாலும் தனது வித்தியாசமான குரலால் பிரபலமானவர் பின்னணி பாடகி வைக்கோம் விஜயலட்சுமி. இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 2013-ம் ஆண்டு முதல் முதலாக ‘செல்லுலாய்ட்’ என்ற மலையாள படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடல் பெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.

vaikom-vijayalakshmi

குக்கூ படத்தில் கொடையில மழை போல என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து தமிழில் பாடல்கள பாடிவந்த வைக்கோம் விஜயலட்சுமி சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் பாடிய மண்ணிலே ஈரம் உண்டு பாடல் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது பல முன்னணி படங்களிலும் இவர் பல பாடல்கள் பாடி வருகிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு மிமிக்ரி கலைஞரான மேரி அனுப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கிடையே பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால், 2021-ம் ஆண்டு கணவரை  பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி விவாகரத்து செய்தார்.

vaikom-vijayalakshmi

இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் தான் கணவரிடம் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியிருந்தார். இது அனைவரது நெஞ்சையும் உலுக்குவது போல அமைந்தது. அந்தப் பேட்டியில் இவர் கூறுகையில், நான் என்ன செய்தாலும் நெகட்டிவ் மட்டும் தான் சொல்லுவார் என் கணவர், தாளம் கொட்டுவது அவருக்கு பிடிக்காது. நான் எப்பொழுதுமே அழுது கொண்டுதான் இருப்பேன், அப்பா அம்மாவை விட்டு பிரிக்க பார்த்தார். இதனால் நான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்தேன் என கூறியுள்ளார். இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

From Around the web