மிரட்டல் லுக்கில் செல்வராகவன்.. இணையத்தை தெறிக்க விடும் ‘நானே வருவேன்’ டீசர் !

 
1

நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்த முடித்துள்ளார். 10 வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி நானே வருவேன் படத்திற்காக இணைந்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நடிகை எல்லிஅவர்ராம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இதுதவிர இயக்குனர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

1

மேலும் தனுஷின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாகவும் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது 

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை வரும் செப்டம்பர் 29-ஆம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதையொட்டி இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 


 

From Around the web