செம அப்டேட்..!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்! 

 
1

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.

Jailer

இப்படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. தற்போது இந்தத் தகவலை ஜெயிலர் படப்பிடிப்புத்தளத்திலிருந்து மோகன்லாலின் படத்தை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

மோகன்லாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை பகிர்ந்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியுடன் ஏற்கனவே தளபதி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த நிலையில் மோகன்லாலுடன் ஜெயிலர் படத்துக்காக இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து ஐதராபாத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். ஐதராபாத்தில் ரஜினிகாந்த் - மோகன்லால் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லால் கடைசியாக தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web