ஜீ தமிழில் இருந்து சன்டிவிக்கு செல்லும் செம்பருத்தி ஷபானா..!!  
 

 
1

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ஷாபனா.சமீபத்தில் இந்த சீரியல் நிறைவுபெற்றதை அடுத்து எந்த சீரியலில் ஷாபனா நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

shabana

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. 

இந்நிலையில் ஜீ தமிழ் சீரியலில் நடித்து வரும் ஷாபனா, தற்போது சன் டிவிக்கு மாறவுள்ளதாக கூறப்படுகிறது. சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய சீரியலில் ஷாபனா, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுலைமான் என்பவர் இந்த சீரியலை இயக்கவுள்ளார்.

இந்த சீரியலில் நடிகர் பவன் ரவீந்திரா என்பவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் பிசியாக நடித்து வருபவர். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், முதன்முறையாக தமிழ் சீரியல்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web