செம்ம லவ் ஸ்டோரி..!!  4 அழகான காதல் கதையில் நடித்திருக்கும் அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ டீசர் வெளியீடு ! 

 
1

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் நெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார்.  வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் கடைசியாக நடித்த மன்மதலீலை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது அசோக் செல்வன் கார்த்திக் என்பவர் இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' படத்தில்  நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, பிரபல தெலுங்கு நடிகை ஷிவாத்மிகா, ஷிவதா என நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.ரிது வர்மா மாடர்ன் பெண்ணாகவும், அபர்ணா பாலமுரளி கிராமத்து பெண்ணாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் ஷிவாத்மிகா கல்லூரி பெண்ணாக நடிக்கிறார்.  

1

"கதை சென்னையில் ஆரம்பித்து சென்னையிலே முடிகிறது. ஆனால் ஹைதராபாத், விசாகப்பட்டினம், டெல்லி, சண்டிகர், மணாலி, கொல்கத்தா, பொள்ளாச்சி என்று பலவேறு இடங்களுக்கு கதை நகருமாம்.பெங்களூர் டேஸ், சார்லி, தோழா, கீதா கோவிந்தம் ஆகிய படங்களுக்கு பெயர் பெற்ற கோபி சுந்தர் இசையமைக்கிறார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை வியகாம் 18 ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நான்கு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

From Around the web