'த்ரிஷ்யம் 3' குறித்து வெளியான செம்ம அப்டேட் !
Sep 8, 2022, 08:05 IST
மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது.
இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வெற்றிப்பெற்றது.இதற்கிடையே ‘திரிஷ்யம் 3’ உருவாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் மூன்றாவது முறையாக மோகன் லாலும், ஜீத்து ஜோசப்பும் இணைந்துள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
 - cini express.jpg)