சீரியல் நடிகரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான நடிகர் காரியவட்டம் சசிகுமார் காலமானார்..!!

 
1

1989-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ‘கிரைம் பிராஞ்ச்’ படத்தின் மூலம் அறிமுகமானார் காரியவட்டம் சசிகுமார். அதனைத் தொடர்ந்து, கவைரான், தீர்ப்பு, மிமிக்ஸ் அணிவகுப்பு, அபயம், தேவாசுரம், செங்கோல், அடியாதே கண்மணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

karyavattom sasikumar

விஜயகிருஷ்ணன் இயக்கிய ‘மயூரநர்த்தம்’ படத்தில் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு நிதி சேர்க்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு குறித்து நடிகை சீமா ஜி நாயர் கூறுகையில், பிரணாம்.. திரைப்பட சீரியல் நடிகரும்.. திட்ட ஒருங்கிணைப்பாளருமான காரியவட்டம் சசி சேத்தன் காலமானார்.. திடீரென உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

RIP

எல்லோரிடமும் அன்பாக பழகியவர்.. என்ன செய்தாலும் பாராட்டிக்கொண்டே இருப்பவர்.. ஏட்டனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மனோஜிடம் இருந்து போன் வந்ததும் கட்டப்பனாவில் இருந்தேன்.. சேத்தனின் சிகிச்சைக்கு பணம் சேகரிக்கும் முயற்சியில் இருந்தேன்.. அதுக்காக நேற்றே பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன.. யாருடைய உதவிக்கும் காத்திராமல் பலருக்கும் உதவியாக இருந்த சேத்தன் கிளம்பிச் சென்றார்.. என்ன சொல்வது.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. என்று தெரிவித்துள்ளார்.

From Around the web