5 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் ஷாருக்கான் படம்..!!

 
1

போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் வழக்கில் மகன் கைது, தொடர் தோல்விகள் என சினிமா துறையில் இருந்து 5 ஆண்டுகள் ஒதுங்கியிருந்த நிலையில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 25ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்துள்ள இந்தப் படத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா, இலியாஷ் பதுர்கவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஷாருக் கான், ஃபெரோஷ் பதான் என்ற பெயரில் ரா ஏஜென்ட் ஆக வருகிறார்.இலியாஷ் பதுர்கவ் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் விஷால் தத்லானி, சேகர் ராவ்ஜியானி ஆகியோர் இசையமைத்துள்ளனர். 

From Around the web