புதிதாக கார் வாங்கிய செவ்வந்தி சீரியல் நடிகை..!! 

 
1

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்ற சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் திவ்யா ஸ்ரீதர், 2017இல் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலம் தான் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார். தற்போது விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் நடித்து வரும் அர்னவ் என்பவரும் கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்திருந்தார்.

இருவரும் ஒன்றாக நடிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்த அறிவிப்பை இரண்டு மாதங்களில் கழித்து செப்டெம்பரில் தான் தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் திவ்யா பொதுவெளியில் தெரிவித்திருந்தார். அப்போது தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் வெளியிட்டார்.

இதற்கிடையே, யார் கண் பட்டதோ தெரியவில்லை. இந்த ஜோடி தங்களுக்கு சண்டை போட்டு, பொதுவெளியிலும், சண்டை போட்டுக் கொண்டனர். இந்த விவகாரம் போலீஸ் வரை சென்று பரபரப்புச் செய்தியாக மாறியது.

இந்நிலையில், சமீபத்தில் செவ்வந்தி சீரியல் குழுவினர், திவ்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், அவரது வீட்டிற்கு சென்று வளைகாப்பு நடத்தினர். இதையடுத்து, தற்போது புதிய எம்.ஜி. கார் ஒன்றை வாங்கியுள்ள திவ்யா ஸ்ரீதர், அதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ”புதிய ஒன்றின் ஆரம்பம் ஏதோ ஒரு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. எதுவும் சாத்தியமாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web