சிட்டி ரோபோவாக மாறிய ஷிவாங்கி..!!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் பங்குகொண்டவர் தான் சிவாங்கி. அதன் மூலம் அவர் பிரபலமானார். ஆனால் அதற்கு முன்னரே அவர் ஓவர் மெகா ஹிட் படத்தில் பாடியுள்ளார் என்பது பல பேருக்கு தெரியாது சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்னரே, அதாவது 2009-ஆம் ஆண்டுலேயே 'பசங்க' திரைப்படம் வழியாக  பாடகியானார் சிவாங்கி.  "அன்பாலே அழகும்" என்கிற பாடலை பாடியது சிவாங்கி தான் என்பது இன்றும் பலருக்கும் தெரியாது.
அதன் பிறகு 2020-ஆம் ஆண்டில் காமெடி-குக்கிங் ஷோவான குக்கு வித் கோமாளியில் கலந்து கொண்ட சிவாங்கி, ஒரு க்யூட்டான கோமாளியாக கலக்கி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே பரிச்சயமானார்.

குக் வித் கோமாளி சீசன் 3 கோமாளியாக பல சேட்டைகளை செய்து வரும் சிவாங்கி இந்த வாரம் எந்திரன் சிட்டி ரோபோ போல் கெட்டப்போட்டு கலாட்டா செய்கிறார். இதற்காக மேக்கப் போடும் வீடியோவை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.

From Around the web