பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக்கிங் நியூஸ்.!! வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா ?

 
1

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில்ராஜு இயக்குனர் தயாரிக்கிறார். மேலும், வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில், படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியாகும்‌ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே பண்டிகை தினங்களில் மற்ற மொழி படங்கள் வெளியிடக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. அதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரசுடு’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வாரிசு படம் வெளியாவதில் சிக்கல் கொடுப்பதற்கு காரணம் தமிழ்நாடு திரைப்பட விநியோகிஸ்தர் தலைவர் தான் என்று கே ராஜனை தலைவர் தாக்கி பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். மேலும், வாரிசு படம் திட்டமிட்டபடி ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்றும் அதற்கு மாறாக ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் உதயநிதி சந்தோசமாக இருப்பார் என்றும் கூறி குண்டை போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

1

மேலும், வாரிசு படம் வெளியாகமல் போனால் துணிவு படம் தமிழகத்தில் 1000 திரையரங்கிற்கு மேல் வெளியாகும் என்றும் ககூறியுளளார். இது ஒருபுறம் இருக்க தெலுங்கு திரைப்பட இது சங்கத்தினர் வாரிசு படத்திற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை, நேரடி தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று மட்டும் தான் சொன்னோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் திட்டமிட்டபடி வாரிசு படம் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

From Around the web