நாளை மறுநாள் ஒடிடியில் வெளியாகிறது சிபிராஜ் ஆண்ட்ரியா படம்..!!
Jul 27, 2022, 18:01 IST

கமலகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வட்டம்'. இந்த படத்தில் கதாநாயகனாக சிபிராஜும், முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். முதல்முறையாக சிபியும், ஆண்ட்ரியாவும் இணைந்து நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை கூடியுள்ளது. இந்த படத்தில் சிபிக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார்.
இவர்களுடன் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது.