மீண்டும் விஜய் டிவி-யில் தோன்றிய சிவகார்த்திகேயன்.. எந்த ஷோவில் தெரியுமா..?  

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி சீசன் ”. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின் மூன்றாவது சீசன் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பல பிரபலங்கள் தங்களது சமையல் திறமையை காட்ட களமிறங்கி இருக்கின்றனர்.

இந்தநிலையில் இந்த வாரத்தின் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் என்ட்ரி கொடுக்கும் போதே நம்ம வீட்டு பிள்ளை என ரக்ஷன் அழைக்க குக்குகளும், கோமாளிகளும் கரகோஷத்தோடே வரவேற்தனர். மேலும், அவர் கோமாளிகளுடன் சேர்ந்து பல பொருள்களை எடுக்கவும் உதவி செய்கிறார். பின் குரேஷி போன வாரம் உங்களை போல கெட்டப் போட்டதாக சொல்ல அதை நீங்கள் பார்த்தால் அப்பறம் இந்த நிகழ்ச்சிக்கே வராமல் போயிருவீங்க என நகைச்சுவையாக சொல்கிறார். அதன் பிறகு சிவா போல குரேஷி பேச, என்னை போலவே பேசுகிறாரே என சிவகார்த்திகேயனும் வியந்து பாராட்டுகிறார்.

From Around the web