தீபாவளி ரேஸில் இணைந்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம்..!!

 
1

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பிரின்ஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

1

தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் உருவாகி வரும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் டீச்சராக நடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமைகளை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொலைக்காட்சி மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை விஜய் டிவி நிறுவனம் சுமார் 45 கோடிக்கு வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில்,  இந்நிலையில் படம் அக்டோபர் 21ம் தேதி தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் ரிலீசாக உள்ளதாக இயக்குநர் அனுதீப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது 

From Around the web