விரைவில் ஓடிடியில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம்..!! எப்போ தெரியுமா ?

 
1

டாக்டர், டான் என தொடர் வெற்றி படங்களை கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான படம் தான் பிரின்ஸ்.முழுக்க காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தில் வாத்தியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாகவும், நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தமன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் தீபாவளியையொட்டி வெளிவந்தது.

1

வழக்கமாக சிவகார்த்திகேயன் படம் என்றாலே காதலும், காமெடியும் இருக்கும் என்பதால் குடும்பத்துடன் படத்தை பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த தீபாவளிக்கு கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் மட்டுமே போட்டியாக நிற்க, பிரின்ஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலில் கல்லா கட்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் கார்த்தியின் சர்தார் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரின்ஸ் தோல்விப்படமாக மாறியது. சிவகார்த்திகேயன் ரசிகர்களே படம் மொக்கை என கூறும் அளவில் இருந்தது. 

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி டிஸ்னிப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 


 

From Around the web