கார்கி படத்தில் இருந்து வெளியான ஸ்னீக் பீக்… சீரியஸான படம்னு யாரு சொன்னா ..?

 
1

தென்னிந்திய மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘கார்கி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் காளி வெங்கட், காலேஷ் ராமானந்த்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இப்படத்திற்கு ஸ்ரையாந்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த வார இறுதியில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் சாய் பல்லவியின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர், மேலும் காளி வெங்கட் இந்திரன்ஸ் கலியபெருமாள் வேடத்தில் நடித்ததற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் புதிய காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். காளி வெங்கட்டின் இயல்பான நடிப்பும், சாய் பல்லவியின் எதிர்வினைகளும் ஒருவரையொருவர் பாராட்டி, படத்தின் நகைச்சுவைக்கு பங்களிக்கும் ஒரு ஸ்னீக் பீக் காட்சி .

From Around the web