இன்று வெளியாகும் காபி வித் காதல் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது..!! 

 
1

சுந்தர் சியின் காமெடி திரைப்படங்களுக்கு எப்போது வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘காஃபி வித் காதல்’.ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

1

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

இந்த திரைப்படம் இன்று (நவம்பர் 4ம் தேதி) திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜீவா காரசாரமாக பேசும் அந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

From Around the web