‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது..!! 

 
1

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது மலையாளத்திலும் நடிக்கத் துவங்கியுள்ளார்.  

தற்போது ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.

இன்றைய கால கட்டத்தில், தினசரி வாழ்க்கையில்,கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதால் படத்திற்கு எதிர் பார்ப்பு எகிறி உள்ளது.

1

ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கஸ்டமர் என்ற பெயரில் ரவுடி கும்பல் ஒன்று டாக்சியில் வருகிறது. அதை தெரிந்துக்கொண்ட டிரைவர் ஜமுனா, எப்படி சமாளிக்கிறார் என்பது தான் காட்சிகளாக வெளியிடப்பட்டுள்ளது. 

இப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படமும் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

From Around the web