இன்று வெளியாகவுள்ள கலகத்தலைவன் படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியானது..!! 

 
1

காமெடி ஜானர் திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி, தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். அந்த வகையில் உதயநிதியின் ஆக்ஷன் அதிரடியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத்தலைவன்’. ‘தடம்’ படத்தின் மூலம் பிரபலமான மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் மெட்ராஸ் புகழ் கலையரசனும், பிக்பாஸ் நடிகர் ஆரவ்வும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. 

 உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் இன்று  நவம்பர் 18-ஆம் தேதி  திரையரங்கில் வெளியாகவுள்ளது.

1

இன்று வெளியாகவுள்ள இப்படத்தை முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து பார்த்தார். படத்தை பார்த்த பிறகு உதயநிதிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது 

From Around the web