அப்படின்னா சினிமாவே எனக்கு வேண்டாம் - கீர்த்தி சுரேஷ் அதிரடி

 
1

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும்  ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் உடன் சாமி 2, விஷாலுடன் சண்டைக்கோழி 2 என டாப் ஹீரோக்களுடன் ரவுண்ட் கட்டினார். சூப்பர் ஸ்டார் ர்ஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்த கீர்த்தி, தற்போது உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார்.

Keerthy-suresh

இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடுவது பற்றியும், அங்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் கீர்த்தி சுரேஷ். திரைத்துறையில் எப்போதுமே பாலியல் தொல்லை குறித்த புகார்கள் அடிக்கடி வெளியாவது வழக்கமாக உள்ளது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் நடிகைகள் வரை பலரும் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அழைப்பதாக நடிகைகள் கூறிய பல குற்றச்சாட்டுகளை இந்த திரையுலகம் பார்த்துள்ளது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “சில நடிகைகள் திரைத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி என்னிடம் நேரடியாக கூறியுள்ளனர். ஆனால், நான் இப்படியான அனுபவங்களை சந்தித்தது கிடையாது. என்னை யாரும் பாலியல் தொந்தரவு செய்தது கிடையாது” என சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

Keerthy-suresh

தொடர்ந்து பேசிய அவர், “என்னிடம் யாரும் நடிப்பதற்கு வாய்ப்புத் தருகிறேன் எனக் கூறி தவறான கண்ணோட்டத்தில் அணுகினால் அல்லது பாலியல் தொல்லைக் கொடுத்தால், அந்த சான்ஸை வேண்டாம் என கூறி விட்டு விலகிவிடுவேன். அதுமட்டும் இல்லை சினிமாவே வேண்டாம் என சொல்லிவிட்டு இதில் இருந்து விலகிவிடுவேன். அதற்குப் பதிலாக வேறு எதாவது வேலை பார்த்து பிழைத்துக் கொள்வேன்” என ஓப்பனாக பேசியுள்ளார்.

From Around the web